பொது செய்தி

இந்தியா

சீனர்களுக்கு இடமில்லை: டில்லி ஹோட்டல்கள் முடிவு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
delhi, chinese nationals, delhi hotels, india china border dispute, சீனர்கள், இடமில்லை, ஹோட்டல்கள், முடிவு, டில்லி

புதுடில்லி: சீனப் பொருட்களை புறக்கணிப்பதுடன், சீனர்கள் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை என, டில்லி ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன.

லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதையடுத்து, சீனா மீது, நாடு முழுதும், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துஉள்ளது.

இந்நிலையில், டில்லி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், சி.ஏ.ஐ.டி., எனப்படும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என, சி.ஏ.ஐ.டி., விடுத்துள்ள கோரிக்கையை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.ஓட்டல்களில் சீன பொருட்களை பயன்படுத்துவதில்லை என, முடிவு செய்துள்ளோம். மேலும், சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டல்களில் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை எனவும் முடிவு செய்துஉள்ளோம்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி, டில்லி ஓட்டல்கள் சங்கத்தின் செயலர், மகேந்திர குப்தா கூறியதாவது:எங்கள் அமைப்பில், 3,000க்கும் அதிகமான, 'பட்ஜெட்' ஓட்டல்களின் உரிமையாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். எங்களின் முடிவு பற்றி, அண்டை மாநிலங்களில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களிடம் தெரிவித்து, அவர்களையும், கடைப்பிடிக்கக் கோரி வலியுறுத்துவோம்.டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களையும் தொடர்பு கொண்டு, இது பற்றி பேசுவோம்.


latest tamil newsசீனர்களை புறக்கணிப்பதால், எங்களுக்கு நஷ்டம் தான்; ஆனால், நாட்டை விட, இது பெரிதல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.டில்லி ஓட்டல் உரிமையாளர்கள் முடிவை வரவேற்று, சி.ஏ.ஐ.டி., பொதுச் செயலர், பிரவீன் கான்டேல்வால் கூறுகையில், ''சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, வெற்றி பெறத் துவங்கியுள்ளது. இது பற்றி, பலதரப்பட்ட மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Gaborone,போஸ்ட்வானா
28-ஜூன்-202012:41:42 IST Report Abuse
Rajan சீனாவை வெல்ல குள்ளநரித்தனமே தேவை. அவர்கள் போக்கு நேருக்கு நேர் போர் பாதைக்கு ஒவ்வாதது. பீஷ்மர் வழி அல்ல. அவர்களுக்கு சகுனியின் வழியே சிறந்தது
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
26-ஜூன்-202019:05:23 IST Report Abuse
dina SUCESS
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202016:52:49 IST Report Abuse
J.V. Iyer இதைப்போல அவர்களும் முடிவெடுக்கலாம். இந்தியாவில் சீனா பங்கில்லாத வியாபாரம் என்பது மிகவும் குறைவு. பெரிய பெரிய நடிகர்கள் விளம்பரத்தில் வியாபாரம் பெற்று உதவி இருக்கிறார்கள். இந்தியர்களும் நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். சொல்லுவது யாருக்கும் எளிது. அகுதறிவாம் சொல்லியவண்ணம் செயல்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202022:50:03 IST Report Abuse
தல புராணம்என்ன டபால் ன்னு பல்டி அடிச்சிட்டீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X