பொது செய்தி

இந்தியா

'வேறுபாட்டை பேசி தீர்க்கலாம்': இந்தியாவுக்கு சீனா அழைப்பு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
India, China, LAC standoff, Chinese Ambassador Sun Weidong, இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

புதுடில்லி : ''இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம்,'' என, சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, அவர் அளித்த பேட்டி: கிழக்கு லடாக் பிரச்னை தொடர்பாக எழுந்துள்ள வேறுபாடுகளை சமாளித்து, தீர்வு காணும் ஆற்றல், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உள்ளது. இந்தியாதான், ஒப்பந்தத்தை மீறி, உண்மையான எல்லைக் கோட்டை தாண்டி, சீன ராணுவத்தினரை தாக்கியது.

இதையடுத்து நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் இறந்தனர். அதன் பின், சீனா திட்டமிட்டு, தாக்குதல் நடத்தியதாக, இந்தியா குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், அதை மீறுவோருக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், எச்சரித்துள்ளது. அதனால், லடாக்கில் பதற்றத்தை குறைப்பது இந்தியாவின் கையில் தான் உள்ளது. எல்லைப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க, சீனா தயாராக உள்ளது. ஆனால், இந்தியா, சந்தேக கண்ணோடு, மோதல் போக்கை தேர்ந்தெடுத்தால், அது இரு நாட்டு மக்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு எதிராக மாறி, தவறான பாதைக்கு வழி காட்டி விடும்.


latest tamil news



இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்படி, எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிரந்தரமாக ஏற்படுத்த, இந்தியாவுடன் இணைந்து செயல்பட, சீனா எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இந்தியா மறுப்பு


இதற்கிடையே, சீன துாதரின் குற்றச்சாட்டை, மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா, செய்தியாளர்களிடம் பேசியதாவது: சீனா, ஏற்கனவே ஒப்புக் கொண்டதற்கு மாறாக, உண்மையான எல்லை கோட்டை தாண்டி,லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் முகாம்களை அமைத்தது. இதை, கடந்த, 15ம் தேதி இந்திய ராணுவத்தினர் தட்டிக் கேட்ட போதுதான் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
26-ஜூன்-202019:45:36 IST Report Abuse
Ray சீனா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரிவு படுத்த நினைக்கிறது. நம்ம அபிலாஷைகள் சிறியது மாநிலங்கள் லெவல் அவங்க முழுசா தேசத்தையே முழுங்க பாக்றாங்க அவ்ளோதான் டிஃபரென்ஸ்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூன்-202019:40:28 IST Report Abuse
S. Narayanan ஏன் பயம் காரணமா. ஆனால் சீனாவை எந்த காலத்திலும் நம்ப முடியாது.
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
26-ஜூன்-202019:03:42 IST Report Abuse
Gopalakrishnan Ra சீனாவை நம்பாதே. அதேபோல் காங்கிரஸ் போன்ற பார்ட்டிகளை நம்பக்கூடாது.. சீனாக்காரனிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நாட்டை காட்டிக்கொடுப்பான். கவனம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X