ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி: பா.ஜ., புகார்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ராஜிவ் அறக்கட்டளைக்கு  சீனா நிதி: பா.ஜ., புகார்

புதுடில்லி: காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு, சீனா நிதி அளித்துள்ளது என, பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.

லடாக் எல்லையில், இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பா.ஜ.,வும், காங்கிரசும், வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர், மோடி மீதும், காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'டுவிட்டரில்' தினமும் குற்றம் சுமத்தி வருகிறார். இதற்கு, பா.ஜ., சார்பில், பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த, 2017ல், டோக்லாமில், இந்திய - சீன படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன துாதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது.

காங்., கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனமாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார். இதன் உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் உட்பட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு, சீன துாதரகம் சார்பில், 2005 - 06ம் ஆண்டில், நிதி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி, 2005 - 06ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவது தான், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தமா; இந்த நிதியுதவியால் தான், ராகுல், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்பதை, காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202019:12:24 IST Report Abuse
ஆப்பு அவிங்களாவது இந்தியாவுக்கு நன்கொடை கொண்டாந்தாங்க. நீங்க சீனாவுக்கு 3000 கோடிக்கு சிலை ஆர்டர் குடுத்தீங்க. ஜிங் ஜிங்கைக் கூட்டு விருந்து வெச்சு வீண் செலவு. இதெல்லாம் மக்கள் பணம் இல்லியா?
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
26-ஜூன்-202008:56:48 IST Report Abuse
நிலா பப்பு உங்களுக்கு இருக்கு ஆப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X