சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸ்; பரிதாபமாக உயிரிழந்த வியாபாரி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

அம்பத்துார் : ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதால், நெஞ்சு வலியால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடியவர், பரிதாபமாக பலியானார்.

சென்னை, அம்பத்துார் அடுத்த பாடி, தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 65. இவர், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில், வீட்டில் உணவு சாப்பிடும் போது, திடீரென நெஞ்சுவலியால் அவதிப்பட்டுளளார்.அவரது குடும்பத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வரவில்லை. அம்பத்துார் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டனர்; அவர்களும், அழைப்பை ஏற்கவில்லை. ஊரடங்கு காரணமாக, வேறு வாகன வசதி இல்லாத நிலையில், பிரகாஷ் உயிருக்கு போராடினார்.இதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்கு பின், 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ குழுவினர், அங்கு சென்றனர். அவர்கள், பிரகாஷின் உடல் நிலையை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

ஆத்திரமடைந்த அவரது உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்போர், ஆம்பு லன்சை, அங்கிருந்து வெளியே செல்ல விடாமல் முற்றுகையிட்டு, மருத்துவ குழுவினரிடம் வாக்குவாதம் செய்தனர்.கொரட்டூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேச்சு நடத்தி, ஆம்புலன்சை விடுவித்தனர்.அப்போது நடத்திய விசாரணையில், கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணி காரணமாக, குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவது, காலதாமதம் ஆனது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X