பொது செய்தி

தமிழ்நாடு

சுவடியியல், 'ஆன்லைன்' பயிலரங்கம் துவக்கம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை : உ.வே.சா., நுால் நிலையம், எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, 'சுவடியியல்: பதிப்பும் தொகுப்பும்' என்ற, தலைப்பில், 'ஆன்லைன்' பயிலரங்கத்தை, நடத்தி வருகின்றன.சென்னை, பெசன்ட் நகர், உ.வே.சாமிநாதையர் நுால் நிலையம், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நான் ஓர் ஐ.ஏ.எஸ்., அகாடமி ஆகியவை இணைந்து, 'சுவடியியல்: பதிப்பும் தொகுப்பும்' என்ற தலைப்பில், 'ஆன்லைன்' பயிலரங்கத்தை, நேற்று முன்தினம் முதல், நடத்தி வருகின்றன.

இதில், நேற்று, உ.வே.சா., நுால் நிலைய சுவடிகளும், பதிவேடுகளும் குறித்த, வகுப்புகள் நடந்தன. இன்று, ஆவணச் சுவடிகளும், பதிவேடுகளும் தொடர்புடைய வகுப்புகள், நடக்க உள்ளன.நாளை, ஓலைச்சுவடிகள் நுால்கள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த, வகுப்புகள் நடக்க உள்ளன.இறுதி நாளான, 28ம் தேதி, கதைப்பாடல் சுவடிகளும், பதிப்பு அனுபவங்களும் குறித்த, வகுப்புகள் நடக்க உள்ளன.

இந்த வகுப்புகளில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு சுவடிப் பாதுகாப்பு குழுமம், தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலகம் ஆகியவற்றில் இருந்து, தமிழ் புலவர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர்.இந்த வகுப்புகள், நண்பகல், 2:00 மணி முதல், 3:30 மணி வரை நடைபெற உள்ளன. இதில், பங்கேற்க விரும்புவோர், இணைய முகவரியான, ‛ZOOM ID- 4775896897-YOUTUBE ‛Thamizhiyalan' சேனல் வழியே பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X