தமிழ்நாடு

காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டை வைத்து அரசியல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டை, புதிதாக நிர்மாணிக்க முடிவெடுத்த நகராட்சி கமிஷனரை, தி.மு.க., பிரமுகர் தொடர்பு கொண்டு, தரக்குறைவாக பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரயில்வே சாலையில் உள்ள ராஜாஜி மார்க்கெட், மிகவும் பழமையானது. இட நெருக்கடியில் செயல்படுவதால், மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் கட்ட, நகராட்சி நிர்வாகம், பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகிறது.

விசாரணை:

இந்நிலையில், மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் கட்ட, கலெக்டர் பொன்னையா, நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், சமீபத்தில், மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர்.ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மார்க்கெட் வராததால், புதிய கட்டடம் கட்ட, ஏதுவாக இருக்கும் என்பதால், 5 கோடி ரூபாய் மதிப்பில், கட்டடம் கட்டவும் திட்டமிட்டனர்.இதையறிந்த, காஞ்சிபுரம் தி.மு.க., பிரமுகர் ஒருவர், கமிஷனரை போனில் அழைத்து, தரக்குறைவாக பேசியுள்ளார்.

'மக்களுடன் தொடர்பில் உள்ள எங்களிடம், கலந்து ஆலோசிக்கமாட்டீர்களா. நீங்கள் என்ன பெரிய இவங்களா... ஜாக்கிரதையாக இருங்கள்' என, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.இதனால் அதிருப்தியடைந்த கமிஷனர் மகேஸ்வரி, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, சிவகாஞ்சி போலீசில், தி.மு.க., பிரமுகர் மீது புகார் அளித்தார். இதுவரை, இந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை

கண்டிப்பு:

ரயில்வே சாலை, 'அம்மா' உணவகத்திற்கு, சில நாட்களுக்கு முன் ஆய்வுக்கு சென்ற கமிஷனர் மகேஸ்வரி, அங்கு உள்ளாடைகளுடன் இருந்த, அ.தி.மு.க., நிர்வாகியை பார்த்த பின், அம்மா உணவக அதிகாரியை கண்டித்தார். இதனால் அதிருப்தியடைந்த அந்த நிர்வாகி, கமிஷனரை பழி வாங்குவேன் என, கட்சியினரிடம் கூறிவருகிறார். தற்போது, தி.மு.க., பிரமுகரும், நகராட்சி கமிஷனரிடம் பிரச்னை செய்துள்ளார்.

நகராட்சி கமிஷனர், பொறுப்பேற்று ஏழு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், காஞ்சிபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.ஆனால், அரசியல்வாதிகள் பலர், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும், பணி மேற்கொள்ளும் கமிஷனரிடம் தகராறில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

பிரச்னை ஏற்பட்டது எப்படி?

போதிய இடமில்லாமல், நெருக்கடியில் செயல்பட்டு வரும் ராஜாஜி மார்க்கெட்டில், 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. காய், கனி கடைகளை, நகராட்சியிடம் வாடகைக்கு பெற்ற வியாபாரிகள் பலர், அவற்றை, உள் வாடகைக்கு பலரிடம் கொடுத்து, நன்றாகவே, 'கல்லா' கட்டி வருகின்றனர்.புதிய கட்டடம் கட்டினால், சிலர் சம்பாதிக்க முடியாது என்பதால், தி.மு.க., பிரமுகரிடம் சென்று, தங்களது பிரச்னைகளை தெரிவித்ததாக தெரிகிறது.

இதற்காகவே, கமிஷனரை, தி.மு.க., பிரமுகர் தரக்குறைவாக பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், புதிய மார்க்கெட் கட்டடம் கட்ட நிதி வந்தபோது, சில அரசியல் பிரமுகர்கள் அழுத்தத்தால், திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X