மணிப்பூரில் தப்பியது பா.ஜ., அரசு; தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆதரவு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Manipur, BJP, Manipur Crisis, Amit Shah, Rebel NPP MLA, மணிப்பூர்

இம்பால் : மணிப்பூரில் பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்த தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் ஆதரவு அளிப்பதாக கவர்னரிடம் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ. அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது.


latest tamil news


இந்நிலையில் பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இவர்கள் நான்கு பேரும் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பா.ஜ.,வை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் பா.ஜ. அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா மாநில முதல்வருமான கன்ராட் சங்மா மற்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் தேசிய மக்கள் கட்சியினர் எழுப்பியுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமித் ஷா உறுதி அளித்ததை அடுத்து பிரேன் சிங் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கும் முடிவை கைவிடுவதாக தேசிய மக்கள் கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.


latest tamil news


இதையடுத்து இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சங்மா பா.ஜ., மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் சென்றனர். இவர்களுடன் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நான்கு அமைச்சர்களும் சென்றனர். அப்போது பா.ஜ., அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் ராஜினாமா முடிவை கைவிடுவதாவும் அமைச்சர்கள் நான்கு பேரும் கவர்னரிடம் உறுதி அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா 'பதவியை ராஜினாமா செய்த நான்கு பேரும் அந்த முடிவை வாபஸ் பெறுவதாகவும் பா.ஜ., அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளனர்' என அறிக்கை வெளியிட்டார். நான்கு பேரும் முதல்வர் பிரேன் சிங்கையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மணிப்பூரில் பா.ஜ., அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202017:31:22 IST Report Abuse
bigu மூணு பேரும் ஒரு மாதிரியா, தினுசா பாக்கிறாங்க. கச்சிதமா முடிச்சுட்டம் பாத்தீங்களா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூன்-202015:44:44 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் பேகம் மும்தாஜின் கருப்பு தினம் இன்று, இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் பெரிய பார்ட்டி வைக்கலாம் என்று யோசித்தால் இப்படி ஆகி விட்டதே?????
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202008:25:52 IST Report Abuse
RajanRajan நாட்டின் இறையாண்மையை காக்க தேசியம் ஓன்று பட வேண்டும். உள்நாட்டில் இருக்கும் அந்நிய கைக்கூலி சக்திகள் முற்றிலும் வேரறுக்க பட வேண்டும். ராஜ்யத்தின் எல்கைகள் பலபடுத்த பட வேண்டும். அண்டை நாடுகளின் நடவடிக்கைகள் முற்றிலும் கண்காணிக்க பட வேண்டும். யார் எப்ப வேணுமானாலும் எதிரியாக்கலாம் எதிரியாக்க படலாம். இது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X