தமிழ்நாடு

12,904 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
12,904 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 12,904 ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.



சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது, அலைபேசியில் பேசியவாறே வாகனம் ஓட்டுவது போன்ற விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதோடு விதிமீறலின் தன்மையை பொறுத்து ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கின்றனர்.இதன்படி இந்தாண்டில் நேற்றுமுன்தினம் வரை 12,904 பேரின் உரிமத்தை ரத்துசெய்யக்கோரி பரிந்துரைத்துள்ளனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறலால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. இதை தடுக்க அபராத தொகையை மத்திய அரசு அதிகரித்தது. இதன்பின் ஓரளவு விபத்தும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண விதிகளை மீறுவோருக்கு 'இ-சலான்' மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.ஆபத்தை விளைவிக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி தினமும் அதிகபட்சம் 250 பேருக்காவது பரிந்துரைக்கிறோம். இந்தாண்டில் அனுப்பிய பரிந்துரையில் 231 உரிமங்கள் தற்காலிகமாக (3 அல்லது 6 மாதங்கள்) ரத்து செய்யப்பட்டுள்ளன, என்றார்.மதுரை, ஜூன் 26 -மதுரை நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 12,904 ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X