அமெரிக்காவில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
America, CoronaVirus in us, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, Corona Cases, அமெரிக்கா, கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயர்வு

ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த இரு வாரங்களில் பாதிப்பு, இரு மடங்காக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவில், ஒரு வாரத்தில் புதிதாக, 7,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புளோரிடாவில், பாதிப்பு, 25 சதவீதம் உயர்ந்து, 5,500 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


ஹூஸ்டனில், மீண்டும் இரு அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதுபோல, அலபாமா, அரிசோனா மாகாணங்களிலும், ஒரு மாதத்திற்கு முன் இருந்ததை விட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, பல மாகாணங்கள், மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X