பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதிய வியூகம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
கொரோனா, நோயாளி, சிகிச்சை, புதிய வியூகம், Covid-19 in madurai, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, mild, moderate, severe, treatment, covid patients, Madurai

மதுரை : மதுரையில் கொரோனா நோயாளிகளை லேசான, மிதமான, தீவிரமான பாதிப்புள்ளவர்கள் என வகைப்படுத்தி தனித்தனி வார்டுகளில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினமலர் நாளிதழுக்கு மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் அளித்த சிறப்பு பேட்டி:


மூன்று வகை பாதிப்பு


கொரோனா பாதித்தோரை விரைவில் குணப்படுத்த, இறப்புகளை குறைக்க நோயாளிகளை மூன்று விதமாக பிரித்து சிகிச்சையளிக்கிறோம்.அறிகுறியில்லாதவர்களை லேசான பாதிப்புள்ளவர்கள்; அறிகுறியுள்ளோர் மற்றும் அதிதீவிரமில்லா பிற நோய்கள் இருப்பவர்களை மிதமான பாதிப்புள்ளவர்கள்; இருதய, நுரையீரல், சிறுநீரக பாதிப்பு, மூச்சுத்திணறல் உள்ளவர்களை தீவிர நோயாளிகளாக வகைப்படுத்தியுள்ளோம். சிகிச்சை பெறுவோரில் லேசான பாதிப்புள்ளோர் தான் அதிகம்.

இவர்களுக்கு தீவிர பாதிப்பிற்கான வாய்ப்பு குறைவு. இவர்களை மருத்துவ வசதிகள் நிறுவப்பட்ட முகாம்களில் தனிமைப்படுத்தவுள்ளோம். இதற்காக 21 கல்வி நிறுவனங்களை தயார் செய்துள்ளோம். இங்கு 2,045 படுக்கைகளை ஏற்படுத்த முடியும். முதற்கட்டமாக தனியார் கல்லுாரி ஒன்றில் 500 படுக்கைகளை நிறுவி தயார்ப்படுத்தியுள்ளோம். தேவைக்கு ஏற்ப பிற கல்லுாரிகளில் படுக்கைகள் அமைக்கப்படும்.

* மிதமான பாதிப்புள்ளோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்காக இதுவரை 1,500 படுக்கைகள் தயார் செய்துள்ளோம். மதுரை அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 3,500ல் 1,500 படுக்கைகள் பிற நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும். எஞ்சிய 2,000 படுக்கைகளை கொரோனாவிற்கு பயன்படுத்த உள்ளோம். இதில் மிதமான பாதிப்புள்ளோருக்கு 1,500 ஒதுக்கப்படும். தோப்பூரில் இருக்கும் 200 படுக்கைகளும் இவர்களுக்கானது.

* அதிதீவிர பாதிப்புள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை. இதற்காக பல்நோக்கு மருத்துவமனையில் 375 படுக்கைகளை வைத்துள்ளோம். இவை அனைத்தும் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. ஏனென்றால் இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு மூச்சுத்திணறல் வாய்ப்பு அதிகம். இவை தவிர 150 படுக்கை கொண்ட ஐ.சி.யூ., வார்டும் உள்ளது. இப்போதைக்கு படுக்கைகள் போதுமானது. தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும், என்றார்.


latest tamil news



படுக்கை ஒதுக்கீடு


பாதிப்பு லேசானவர்களுக்கு-2,045
மிதமானவர்களுக்கு-1,700
தீவிரமானவர்களுக்கு- 525

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X