பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை:உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.பி.ஏ.,) தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் வெங்கடேசன். மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி.,க்கு அனுப்பிய கடிதம்: ஊரடங்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் மாவட்டத்தில் கீழமை நீதிமன்றங்களில் காணொலி மூலம் விசாரணை நடக்கிறது. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் வழக்கு ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன. அவரவர் அலுவலகங்களிலிருந்தவாறு காணொலியில் வாதிட்டு, வழக்கை நடத்துகின்றனர். வழக்கறிஞர்கள் வீடுகளிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்லும்போது போலீசார் தடுக்கின்றனர். இதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். சென்னையில் வழக்கறிஞர்கள் வீடுகளிலிருந்து அலுவலகம் செல்லும்போது தடுக்கக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X