பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் உயரும் கொரோனா; முதல்வர் தனிக்கவனம் செலுத்துவாரா?

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை: மதுரையில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சென்னை போன்ற நிலைமை வராமல் தடுக்க முதல்வர் இபிஎஸ் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையில் கொரோனா பாதிப்பு திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் (ஜூன் 24) மொத்த பாதிப்பு
Madurai, Corona Cases, Increase, CM, EPS, CoronaVirus, COVID-19 in Madurai, Covid-19 cases, surge, TN CM, prevention measures, மதுரை, கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு, முதல்வர், இபிஎஸ், தனிக்கவனம்

மதுரை: மதுரையில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சென்னை போன்ற நிலைமை வராமல் தடுக்க முதல்வர் இபிஎஸ் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையில் கொரோனா பாதிப்பு திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் (ஜூன் 24) மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில், இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் மதுரை நகரில் நேர்கிறது. இதனால் சென்னையின் நிலை, தூங்கா நகருக்கும் தொற்றிவிடும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது. இது மதுரைவாசிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsவசதிகளில் பின்தங்கிய மதுரை


சென்னையில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை வசதிகளை ஒப்பிடும் போது மதுரை பல மடங்கு பின்தங்கியுள்ளது. இருப்பது ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தான். இங்குள்ள 3,500 படுக்கைகளில் கொரோனா வார்டிற்காக 900 ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 1,100 படுக்கைகளை ஒதுக்க வாய்ப்புள்ளது. இது தவிர தோப்பூர் காசநோய் மருத்துவமனை, ரயில்வே, இ.எஸ்.ஐ., தாலுகா மருத்துவமனைகளில் மேலும் 500 படுக்கைகள் கிடைக்கலாம். தொற்றின் வேகம் தொடர்ந்தால் வெகுசில நாட்களில் இந்த படுக்கையெல்லாம் நிரம்பிவிடும்.


latest tamil news


கல்லுாரி, பள்ளிகளில் வைத்து சிகிச்சையளிக்கலாம் என்றால், மருத்துவமனை உபகரணங்கள், டாக்டர், செவிலியர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் மட்டும் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, பிற மாவட்டங்களில் இருந்து டாக்டர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போதோ அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக பாதிப்பு உயர்கிறது. எனவே பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை பெறுவது சாத்தியமற்றது.


latest tamil newsபரிசோதனை கருவிகள் போதாது


இன்னொரு புறம் பரிசோதனை வசதியில் சென்னையை காட்டிலும் மதுரை 10 மடங்கு பின்தங்கியுள்ளது. அங்குள்ள ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் மூலம் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதிக்கப்படுகின்றனர். மதுரையிலோ தினமும் ஆயிரம் மாதிரிகளை தான் சோதிக்க வசதியுள்ளது. ஆனால் தினமும் 2000 ஆயிரம் பேரின் மாதிரி சேகரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பரிசோதனை கூடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. நேற்றைய பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்தவர்களிடம் 21, 22ம் தேதிகளில் மாதிரி சேகரிக்கப்பட்டது. 23, 24, 25 தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவு இன்னும் கிடைக்கவில்லை.


latest tamil news


கொரோனா பரிசோதனையில் மதுரை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில் கூட மதுரையை விட அதிக பரிசோதனை நடந்துள்ளது. கொரோனா வார்டில் தினமும் 5 சந்தேக மரணங்கள் நடக்கின்றன. நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் பழைய மாதிரி தரம் இல்லை. மருத்துவ கண்காணிப்பும் போதிய அளவு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு நீள்கிறது. மதுரையின் பரப்பளவு, மக்கள் தொகையை சென்னையோடு ஒப்பிட்டால் மிகக்குறைவு தான்.

சென்னையில் ஒரே நாளில் 1500 பேருக்கு பாதிப்பு என்றால், மதுரையில் 150 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது சென்னை பாதிப்பிற்கு சமமானதே. எனவே அரசு தீவிர கவனம் செலுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கொரோனா நோயாளிகளை கவனிப்பதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, எதிர்கால சவால்களை சமாளிக்க முதல்வர் பழனிசாமி நேரடியாக தலையிட வேண்டியது அவசியம். இல்லையென்றால் மதுரை சென்னையாவதை தடுப்பது அரிது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202015:35:10 IST Report Abuse
ஆப்பு ஏன் செல்லூர் தெர்மோகோல் அமைச்சர் என்ன ஆனாரு? முதல்வர் சென்னையில் பிசியா இருக்காரே.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
26-ஜூன்-202013:16:15 IST Report Abuse
Visu Iyer பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் இதற்காக பெரியார் பஸ் நிலையம் மாற்றப்பட்டது.. இப்போ அந்த மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கணுமே.. இன்னமும் வசதிகள் இல்லை என்றால்....
Rate this:
Cancel
Rathinakumar KN - Madurai,இந்தியா
26-ஜூன்-202011:58:39 IST Report Abuse
Rathinakumar KN மதுரையில் நோய் பரவ முக்கிய காரணங்கள் ஷேர் ஆட்டோ, டவுன் பஸ். இதில் மக்கள் பயணம் செய்தவர்களும், இதை இயக்கியவர்களும் துளிகூட சமூக இடைவெளி கடை பிடிக்கவில்லை. மதுரையில் ஓடும் ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமையாளர்கள் பெரும்பாலும் அரசியவாதிகள் தான். இதனால் போலீசும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பெயருக்கு சில நடவடிக்கை எடுத்தார்கள். அரசு பேருந்தும் வருமானத்தை ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்பட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X