காய்ச்சல் பரிசோதனைக்கு வாகனங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

 காய்ச்சல் பரிசோதனைக்கு வாகனங்கள்

Added : ஜூன் 26, 2020
Share

மதுரை :

மதுரையில் கொரோனா தொற்றை கண்டறிய 42 நடமாடும் காய்ச்சல் பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டன.மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கலெக்டர் வினய் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வாகனங்களை துவக்கி வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், சரவணன், போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன், சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காணிப்பு அலுவலர் கூறுகையில்,''மக்கள் இருக்குமிடத்திற்கு சென்று பரிசோதனை செய்யும் போது யாருக்காவது அறிகுறித்து தெரிந்தால் அவர்களுக்கு எந்த மாதிரி சிகிச்சையளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படும். ஒருவருக்கு அறிகுறித்து தெரிந்தால் 24 மணி நேரம் கண்காணித்து சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும் என்பது இதன் நோக்கம்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X