பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 4.9 லட்சம் பேருக்கு கொரோனா: 15,301 பேர் பலி

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus death toll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூன் 25) ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு விவரம்


மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,47,741 - 6,931
டில்லி - 73,780 - 2,429
தமிழகம் -70,977 - 911
குஜராத்- 29,520 -1,753
உ.பி.,-20,193-611
ராஜஸ்தான்-16,296-379
மேற்கு வங்கம்- 15,648-606
ம.பி.,-12,596-542
ஹரியானா-12,463-198
தெலுங்கானா-11,364-230
ஆந்திரா- 10,884 -230
கர்நாடகா-10,560- 170
பீஹார்-8,473-57
காஷ்மீர்-6,549-90
அசாம்-6,321-09
ஒடிசா-5,962-17
பஞ்சாப்- 4,679-120
கேரளா-3,726-22
உத்தர்காண்ட்-2,691-36
சத்தீஸ்கர்-2,452-12
ஜார்க்கண்ட்-2,262-12
திரிபுரா-1,290-01
மணிப்பூர்-1,056-0
கோவா-995-2
லடாக்-941-01
ஹிமாச்சல பிரதேசம்-839-09
புதுச்சேரி-502 -09
சண்டிகர்-423-06
நாகலாந்து-355-0
அருணாச்சல பிரதேசம் - 160- 1
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ - 155-0
மிசோரம்-145-0

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
27-ஜூன்-202009:37:46 IST Report Abuse
R.Kumaresan இந்தியா தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு 15301 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202004:25:55 IST Report Abuse
J.V. Iyer பொருளாதாரத்தில் இந்தியா மேலே வரும் என்று இருந்தோம். இப்போது கரோனா தொற்றில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. அடுத்தவாரம் மூன்றாவது இடம். பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு, இந்த கரோனா தொற்றினால் இறந்தவர்களை அனாதையாக புதைப்பார்கள் என்று தெரியுமா? இறைவன் இந்திய மக்கள் தொகையை குறைக்க முடிவு செய்துவிட்டார். பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
26-ஜூன்-202015:40:37 IST Report Abuse
vbs manian சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன் வெளி வந்த மனோன்மணி சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில் சார்வரி வ்ருஷத்துக்கான முக்கிய குறிப்பு " சாருவரி ஆண்டதனிற் சாதி பதினெட்டும் தீரமறு நோயால் திரிவார்கள்..." என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பதை பார்த்தல் நிஜம்தான் என நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X