பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்புடன் புத்தக வினியோகம்: இணை இயக்குனர் வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement


மதுரை:
"கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகம் செய்ய வேண்டும்," என கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்தார்.மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை உரிய பாதுகாப்புடன் வினியோகிக்கும் முறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, துாத்துக்குடியை அடுத்து மதுரையில் ஆய்வு செய்யப்பட்டது. புகார்கள் இல்லை என்றார்.ஆசிரியர்களை அழைக்க கூடாதுமுதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் 50 சதவீதம் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் ஜூன் 30க்கு பின் வழங்கப்படும். புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச்செல்ல ஆசிரியர்களை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X