மருத்துவ காப்பீட்டு அட்டைகள் கிடைக்காமல் ஆசிரியர்கள் அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீட்டு அட்டைகள் கிடைக்காமல் ஆசிரியர்கள் அதிருப்தி

Added : ஜூன் 26, 2020
Share
மதுரை:மதுரையில் தொகை செலுத்தியும் ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கவில்லை.அரசு ஊழியர்களுக்கு 2016 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2020 ஜூன் 30 வரை செயல்பாட்டில் இருந்த நிலையில் தற்போது ஓராண்டு நீட்டீக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பளத்தில் மாதம் ரூ.180 பிடித்தம் செய்யப்படுகிறது. கொரோனாவிற்கான சிகிச்சையும் இதில்


மதுரை:மதுரையில் தொகை செலுத்தியும் ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கவில்லை.அரசு ஊழியர்களுக்கு 2016 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2020 ஜூன் 30 வரை செயல்பாட்டில் இருந்த நிலையில் தற்போது ஓராண்டு நீட்டீக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பளத்தில் மாதம் ரூ.180 பிடித்தம் செய்யப்படுகிறது. கொரோனாவிற்கான சிகிச்சையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 30 சதவீதம் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இதுவரை கிடைக்கவில்லை.ஆசிரியர்கள் கூறுகையில், "அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் 'நோ ரெக்கார்டுஸ்' என பதில் வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை பெற முடியுமா என கேள்வி எழுந்துள்ளது," என்றனர்.காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழநி, "சம்மந்தப்பட்ட கருவூலங்கள் மூலமே மருத்து காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படுகிறது. கிடைக்காதோர் ஆன்லைனில் பெறலாம். அட்டை இல்லாவிட்டாலும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X