பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 இறுதி தேர்வுக்கு வராத மாணவர்கள்: கல்வித்துறை ஆய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: பிளஸ் 2 இறுதி தேர்வுக்கு வராத மாணவ, மாணவியர் நிலை குறித்து, கல்வித் துறையினர் ஆய்வறிக்கையை சரிபார்த்து வருகின்றனர்.
பிளஸ் 2 பொது தேர்வை, மார்ச் மாதம், 11 ஆயிரத்து, 72 மாணவர்கள், 12ஆயிரத்து, 573 மாணவியர் என, ஈரோடு மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 645 பேர் எழுதினர். இறுதியாக, 24ல் வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வு நடந்தது. அப்போது, கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில், 1,002 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இறுதி தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவ, மாணவியர் விபர பட்டியல் பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டது. அவர்கள் இறுதி தேர்வுக்கு மட்டும் வரவில்லையா? அல்லது எந்த தேர்வுக்குமே வரவில்லையா என்பது குறித்து ஆராயப்பட்டது. ஆப்சென்ட் ஆன மாணவ, மாணவியரிடம் வேதியியல் அல்லது கணக்குப்பதிவியல் தேர்வு எழுதுவதற்கான விருப்பம் குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. இதில் சிலர் மட்டும், தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஓரிரு நாட்களில் விபரம் தெரிய வரும் என, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X