பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: இ-பாஸ் இல்லாமல் வரும், பிற மாவட்ட வாகனங்களை போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தை விட்டு மாவட்டத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து சேவையை அரசு தடை விதித்து வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப்பகுதி செக்போஸ்ட்டுகளிலும், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள், மாவட்ட எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் காய்கறி, பால், மளிகை பொருட்கள், ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், டாக்டர்களின் வாகனங்கள், சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

ஈரோடு-நாமக்கல் எல்லைப்பகுதியான, கருங்கல்பாளையம் செக்போஸ்ட்டில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரண்டு கி.மீ., தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலைபார்க்கும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தொழிலாளர்கள், ஈரோடு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால், எட்டு கி.மீட்டர் தூரம் நடந்தே சென்றனர். நொய்யல் செக்போஸ்ட், விஜயமங்கலம் செக்போஸ்ட், பவானி லட்சுமி நகர் செக்போஸ்ட்டுகளிலும் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X