பொது செய்தி

தமிழ்நாடு

தடை விதித்தும் செயல்பட்ட காய்கறி மார்க்கெட்: கோயம்பேடாக மாறும் என மக்கள் அச்சம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், காய்கறி மார்க்கெட் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சில்லறை காய்கறி விற்பனைக்கு தடை விதித்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல விற்பனை நடந்தது.
கொரோனா தொற்றுக்கான ஊரடங்கால், ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் போதிய இடவசதி இல்லாததால், பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி, பழம் வியாபாரிகள் என, 800 பேர் கடை அமைத்திருந்தனர். பஸ் ஸ்டாண்டில், 380 காய்கறி கடை, 100 பழக்கடையும், பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட சிறிய காய்கறி கடை, வாழைப்பழ மண்டிக்கும் இடம் ஒதுக்கினர். கடந்த, 1 முதல் பஸ் இயக்கம் துவங்கியதால், ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு காய்கறி மார்க்கெட்டை மாற்ற, 1.75 கோடி ரூபாயில் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், பஸ் ஸ்டாண்டில் உள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கும், அவரது உறவினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக, மார்க்கெட் வியாபாரிகள், கால் டாக்ஸி ஓட்டுனர்கள் என, 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிலருக்கு தொற்று அறிகுறி தென்படுவதால், நேற்று காலை முதல், காய்கறி சில்லறை விற்பனைக்கு கலெக்டர் கதிரவன் தடை விதித்தார். மொத்த விற்பனை நள்ளிரவு முதல், காலை, 7:00 மணி வரை, மட்டும் நடத்த யோசனை தெரிவித்தார். இந்த உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டதால், ஏற்கனவே வாங்கி வைத்த காய்கறி வீணாகும் என காரணம் கூறி, நேற்று தடையை மீறி, சில்லறை வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்தனர். கோயம்பேட்டில் இதேபோன்ற பிரச்னையால்,தான், பல மாவட்டத்தினருக்கும் தொற்று அதிகரித்தது. அதே தவறை ஈரோடு மாவட்டத்திலும் செய்து, நேற்று, 1,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட் வந்து சென்றுள்ளனர். இதனால், மக்களிடையே கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X