பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்துக்குள் இயக்கம்: பாதியான பஸ் எண்ணிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: மண்டலத்துக்குள் செல்ல, இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவால், மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் இயக்கம் துவங்கியதால், ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள், 80 மட்டுமே இயக்கப்பட்டது. இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மண்டலத்தில் கடந்த, 1 முதல், 24 வரை, 140 சர்வீஸ் மற்றும், 140 டவுன் பஸ் என, 280 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளது. மண்டலத்தில், ஈரோடு முழுமையாகவும், திருப்பூர், நாமக்கல் மாவட்டத்தில் பகுதியாகவும் பஸ் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி, தாளவாடி என புறநகருக்கும், ஈரோடு மாநகருக்குள்ளும், பெருந்துறை, பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, சிவகிரி, அரச்சலூர் என டவுன் பஸ்களும் இயக்கப்படும். ஏற்கனவே இயக்கப்படாத மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த சில பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினால் மட்டும் பஸ் இயக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். இந்த பஸ்கள், மாவட்ட எல்லை வரை இயங்காது. குறிப்பிட்ட நகரம் வரை மட்டும் இயக்கப்படும். இரவு, 9:00 மணி வரை மட்டும் பஸ் இயக்க வேண்டும் என கூறுவதால், இரவு, 8:00 மணிக்கு மேல் பிற பகுதிக்கு செல்லாது. பணிமனைக்கு, 9:00 மணிக்குள் வந்து சேரும் வகையில் வழித்தடங்களில் மட்டும் பஸ்கள் இயக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில், 60 பஸ்சும், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், 60 பஸ் என, 120 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் இயக்கம் பற்றி, அந்தந்த பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில், அறிவிப்பு வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X