மொடக்குறிச்சியில் அதிகபட்ச மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொடக்குறிச்சியில் அதிகபட்ச மழை

Added : ஜூன் 26, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், மழை பெய்யவில்லை. இதனால், மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாலையில் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ): பெருந்துறை, கோபி தலா, 1, தாளவாடி, 6.2, சத்தி, 2, பவானிசாகர், 28, பவானி, 1.2, மொடக்குறிச்சி, 60, கொடுமுடி, 39, சென்னிமலை, 38, நம்பியூர், 8, எலந்தகுட்டைமேடு, 4.2, கொடிவேரி, 8.4, குண்டேரிபள்ளம், 12, வரட்டுபள்ளம், 1.3, மாவட்டத்தின் மொத்த மழையளவு, 210.3 மி.மீ.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X