பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் வருவாய் துறையினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த, அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு, நிவாரண உதவியாக, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். காலியாக உள்ள, துணை ஆட்சியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி, ஈரோடு தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர், நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் துறையினரும், மாவட்டத்தின், 10 தாலுகா அலுவலகங்களிலும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இத்தகவலை, சங்க மாநில தலைவர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X