சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டை அபகரிக்க கொலை மிரட்டல்: இரண்டாவது மனைவி போலீசில் புகார்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: சத்தியமங்கலம், தவளகிரி நகர் நடராஜன் மனைவி சாவித்ரி, 55, நேற்று ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனு: கணவருக்கு ஒரு கை, கால் செயல்படாது. அவருக்கு வயது, 63. கடந்த, 30 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வருகிறேன். என் கணவரின் முதல் மனைவி சரோஜினியின் மகள்கள் கோகிலவாணி, சத்யா மற்றும் அடையாளம் தெரியாத பெண் கடந்த, 4ல் மாலை என் வீட்டுக்கு வந்து, கொலை மிரட்டல் விடுத்து, இரும்பு கம்பியால் அடித்தனர். என் சுய சம்பாத்தியத்தில் கட்டிய, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை, தன் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என மிரட்டினர். என்னிடம் இருந்த, 3.5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டனர். ஏற்கனவே கடந்த பிப்., 15ல் என் வீட்டுக்குள் நுழைந்து, 18 பவுன் நகை, இரண்டு மொபைல் போன், சொத்து பத்திரம், ஆதார்டு கார்டு, ரேஷன் கார்டு, ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை எடுத்து சென்று விட்டனர். இதுபற்றி சத்தி டி.எஸ்.பி.,யிடம், மனு அளித்தேன். பொருட்களை வாங்கி கொடுப்பதாக கூறினர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, என் கணவரின் முதல் மனைவி சரோஜினி, மகன் துளசிநாதன், மகள்கள் சத்யா, கோகிலவாணி ஆகியோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X