தமிழ்நாடு

மதுரையில் ஒரேநாளில் பாதிப்பு 'இரட்டை சதம்' அடித்தது: 29 வயது வாலிபர் உட்பட 6 பேர் பலி

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:மதுரையை கொரோனா பாதிப்பு குலைநடுங்க செய்துள்ளது. நேற்று ஒரே நாளில் 204 பேருக்கு தொற்று உறுதியானது. ஆறு பேர் இறந்தனர்.புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர், செவிலியர், சுகாதார பணியாளர், போலீசார் ஆவர். இதுதவிர அறிகுறியுடன் 84 பேர், ஏற்கனவே பாதித்தோருடன் தொடர்பில் இருந்த 71 பேர், பிற மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உட்பட 167 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு 200ஐ கடப்பது இதுவே முதன் முறை. மொத்த பாதிப்பு 1,279 ஆக உயர்ந்தது. கொரோனாவிற்கு 6 பேர் பலியாகினர்.நாகமலைப்புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபருக்கு சளி, இருமல் ஏற்பட்டது. ஜூன் 21ல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று காலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். பலியான வாலிபருக்கு வேறு எந்த பாதிப்பும் கிடையாது. மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு நிகழ்ந்த மிகக்குறைந்த வயது மரணம் இது தான். இதே போல கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த தெற்கு மாரட் வீதியை சேர்ந்த 63 வயது, அய்யர் பங்களாவை சேர்ந்த 87 வயது முதியவர்கள் இறந்தனர். தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்ற வடக்கு வெளிவீதியை சேர்ந்த 53 வயது ஆண் பலியானார்.இது தவிர ஏற்கனவே மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று தெரியவந்தது. அதாவது, ஜூன் 18ல் 77 வயது முதியவரும், 21ல் 40 வயது பெண்ணும் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட நிலையில் இறந்தனர். முடிவு நேற்று வெளியானபோது இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது.இருவரின் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வயதானவர்கள், இதர பாதிப்பு இருப்பவர் மட்டுமின்றி குறைந்த வயதினரும் கொரோனாவிற்கு பலியாவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை குலை நடுங்க செய்துள்ள வைரஸ், மாவட்டத்தில் இதுவரை 17 பேரை பலி வாங்கிஉள்ளது.கொரோனாவால் 'திகில்' : ஒரே நாளில் 11 பேர் பலிமதுரை அரசு கொரோனா மருத்துவமனை 'சாரி' வார்டில் (கொரோனா அறிகுறி இருப்பவர்களை அனுமதித்து பரிசோதிக்கும் வார்டு) நேற்று ஒரே நாளில் 11 பேர் இறந்தனர். கடந்த ஒரு வாரமாகவே இங்கு தினமும் 4 முதல் 5 பேர் பலியாகினர். தற்போது 11 பேர் இறந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகள் இனிதான் வெளியாகும். எனினும் கொரோனா நோயாளிகளாகவே கருதி இறுதிச்சடங்கு நிறைவேற்றப்பட்டது. சாரி வார்டில் மட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொத்து, கொத்தாய் நேரும் மரணங்கள் கொரோனா வார்டில் திகிலை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த அனைவருமே கொரோனா நோயாளிகள் அல்ல. பரிசோதனை முடிவில் தான் தொற்று இருந்ததா இல்லையா என்பது உறுதியாகும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202012:55:57 IST Report Abuse
kumar very worst government not use
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X