பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை நபர்கள் பங்கேற்ற திருமண மண்டபத்துக்கு பூட்டு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடந்த திருமணம் ஒன்றில், சென்னையில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டதால், மண்டபத்துக்கு நகராட்சி அலுவலர்கள், 'சீல்' வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பச்சையப்பா தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாணாதுறையைச் சேர்ந்த ஒருவருக்கு, நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில், சென்னையில் இருந்து வந்த, ஆறு பேர் கலந்து கொண்டனர். தகவலறிந்து, மண்டபத்துக்கு சென்ற தாசில்தார் பாலசுப்ரமணியன், நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோர் விசாரணை நடத்தினர். மண்டபத்துக்கு நேற்று, 'சீல்' வைத்தனர். சென்னையில் இருந்து வந்தவர்கள் பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் நகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறையினர் விசாரிக்கின்றனர்.

கடைக்கு சீல்: கும்பகோணம், பெரிய கடைத் தெருவில், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைக்கு, ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் வந்துள்ளனர். நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு நகராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X