ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு; மோசடி செய்த 8 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு; மோசடி செய்த 8 பேர் கைது

Added : ஜூன் 26, 2020
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலையில் உள்ள, ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும், தினமும் பால் கொள்முதல் செய்து வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. அதில், தண்ணீர் கலந்து வருவது, ஆவின் ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள, ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும், தினமும் பால் கொள்முதல் செய்து வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. அதில், தண்ணீர் கலந்து வருவது, ஆவின் ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதை கண்டறிய, ஆவின் ஊழியர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, ஓலைப்பாடி கீரனூர், மேல்பாலானந்தல், நாச்சானந்தல் ஆகிய வழித்தடங்களில், பால் ஏற்றி வரும் வாகனங்கள், வேறு ஒரு வழியாக வந்தது தெரிய வந்தது. மேலும், வரும் வழியில், மினி லாரி டிரைவர்கள் ஆறு பேர், கேன்களில் இருந்த பாலை திருடிக் கொண்டு, அதில், அதே அளவுக்கு தண்ணீர் ஊற்றியும், எடுத்த பாலை வெளியில் இருவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து, ஆவின் பொதுமேலாளர் உலகநாதன், திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட, முரளி, 46, சம்பந்தம், 40, ராஜ்குமார், 26, கார்த்திகேயன், 38, செல்வம், 34, மூர்த்தி, 43, ரகுமாறன், 31, மற்றும் கோபி, 34, உள்பட உள்பட எட்டு பேரை கைது செய்து, இவர்கள் பயன்படுத்திய எட்டு மினிலாரிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X