பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தரவேண்டும்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement


கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு கவுன்சிலிங் தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.கொரோனா தாக்கியதை அறிந்த நெல்லை அல்வா கடை உரிமையாளர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் ஏற்கனவே சில கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்துள்ளனர்; சிலர் சிகிச்சையின் போது தப்பியோடி உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மன அழுத்தம். கொரோனா தாக்கி விட்டதால் உயிர் போய்விடும், நம்மை உறவினர்களும், நண்பர்களும் புறக்கணித்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3 சதவீதம் தான் என்று இவர்களிடம் யாரும் சொல்வது இல்லை. கொரோனா மீதான மக்களின் பீதியும் இவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு காரணம்.கொரோனா பரிசோதனை செய்தால் முடிவு வர மூன்று நாட்கள் வரை ஆகிறது.

அதுவரை நமக்கு 'பாசிட்டிவா', 'நெகட்டிவா' என்ற மனக் குழப்பத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்த வேண்டி உள்ளது. 'பாசிட்டிவ்'என வந்தவுடன் அழைத்து செல்ல போலீஸ், சுகாதாரத்துறை, மாநகராட்சி என ஒரு பெரும்படையே ஆம்புலன்சுடன் வீட்டிற்கு முன் வந்து விடுகிறார்கள். வீட்டில் இருந்து அவர்கள் தனியாக வெளியேறி ஆம்புலன்ஸில் ஏறுவதும் அதிகபட்ச மன அழுத்தத்தில் தான்! அப்படி வெளியேறும்போது அந்த தெருவில் இருக்கும் விஷமிகள் இதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பி விடுகிறார்கள். 'நமது தெருவில் இந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அந்த வீட்டில் இவருக்கு கொரோனா' என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போர்வையில் பரப்புகிறார்கள்.மருத்துவமனைக்கு சென்றாலும் எல்லோரும் அலைபேசியில் வந்து ஆறுதல் தருவதற்கு பதில் துக்கம் விசாரிப்பது போல் பேசுகிறார்கள். மீதி நேரம் அவர்களை தனிமை வாட்டுகிறது. உறவினர்களை பார்க்க இயலவில்லை; தன் நோயின் நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்க இயலவில்லை என்று அவர்களின் மன அழுத்தம் ஏராளம். பக்கத்து படுக்கை நோயாளி இறந்து விட்டார் என்பதில் ஆரம்பித்து வரும் கொரோனா செவிவழிச்செய்திகள் அவர்களை பாடாய் படுத்துகிறது.

மருத்துவமனையில் ஏழு முதல் 14 நாட்கள் வரை அவர்களின் இரவுகள் அழுத்தம் நிறைந்த, துாக்கம் தொலைந்த பொழுதாகி விடுகிறது. இதனை மற்றவர்கள் யாரும் புரிந்து கொள்வது இல்லை.இதற்கு தான் மன நல கவுன்சிலிங் தேவை. கேரளாவில் கொரோனா மன அழுத்தத்தை போக்க இதுவரை 5 லட்சம் பொதுமக்களுக்கு அரசு சார்பில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் போதே நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் கட்டாயம் கவுன்சிலிங் தருகிறார்கள். அதே போன்று தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளுக்காவது கட்டாயம் கவுன்சிலிங் தரவேண்டும்.கொரோனா நோயாளிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்; பரவாமல் தடுக்க வேறு வழி இல்லை. ஆனால் அவர்களை புறக்கணித்து புறந்தள்ளாமல் மனதளவில் அவர்களோடு இணைந்திருந்து ஆறுதல் தர வேண்டும்.

நமது சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X