சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு வேலியை உடைத்த 2 பேருக்கு காப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: நெடும்புலியில், கொரோனா தடுப்பு வேலியை உடைத்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே, நெடும்பலி கிராமத்தில், ஏழு பேருக்கு கொரோனா உறுதியானதால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நெடும்புலி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேறாமல் தடுக்க, ஐந்து தெருக்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் உடைத்து வெளியேறினர். நெமிலி பி.டி.ஓ., அன்பரசன் கொடுத்த புகார்படி, தடுப்பு வேலையை உடைத்த ஜெயராமன், 55, தேனரசு, 45, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஊரை விட்டு வெளியே சென்ற, 14 பேரை வருவாய்த்துறையினர் பிடித்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X