கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகன் மரணத்தில் மர்மம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை: சென்னையில் மகன் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரியும் தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விபரம் பெற்றுத் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி தெரிவிளை இடா ராணி தாக்கல் செய்த மனு:கணவர் ராபர்ட் வில்சன். தொழில் செய்கிறார். மகன் சாம் வில்சன் 22. சென்னை வில்லிவாக்கத்தில் வசித்தோம். பின் அண்ணாநகருக்கு குடிபெயர்ந்தோம். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை கேள்வி கேட்டதால், எங்களை துன்புறுத்தினார். அவர் சிலருடன் சேர்ந்து சதி செய்து வீட்டில் இருந்த மகன் சாம் வில்சன் வாயில் துணியால் மூடி, கட்டாயப்படுத்தி காரில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் கட்டாயப்படுத்தி மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். கணவரிடம் கேட்டபோது மிரட்டினார். பின் வேறு மருத்துமவனைக்கு மகனை மாற்றினர். அவரது உடல்நிலை நன்றாக இருந்தது.மே 26 ல் மறுவாழ்வு மையத்திலிருந்து, 'உங்கள் மகன் அதிமாக மருந்து உட்கொண்டுவிட்டார்,' என தகவல் வந்தது. அங்கு பார்க்கையில் சாம் வில்சன் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலில் காயங்கள் இருந்தன. அடையார் கன்னத்துார் போலீசார் வழக்குப் பதிந்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது.மகனின் உடலை கன்னியாகுமரி மாவட்டம் வடவிளையில் அடக்கம் செய்தோம். மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது. கணவர் பணம் மற்றும் அதிகார பலமிக்கவர். மகனின் உடலை தோண்டி எடுத்து கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை மற்றும் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். கன்னத்துார் போலீசிலிருந்து வேறு ஒரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு இடா ராணி மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி, 'அரசுத் தரப்பில் விபரம் பெற்று ஜூன் 30 ல் தெரிவிக்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X