பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 172 பேருக்கு கொரோனா உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரி ஒருவர், கடந்த வாரம் சென்னை சென்று வந்ததில், அவர் உட்பட, 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சாரதி மாளிகை, காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன. அங்குள்ள வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என, 750 பேருக்கு கடந்த, 23ல் கொரோனா பரிசோதனை நடந்தது. நேற்று மாலை அதன் முடிவுகள் வந்தன. அதில், வேலூர் வசந்தபுரம், ஆர்.என்.பாளையம், ஓல்டு டவுன், சலவன்பேட்டை, தொரப்பாடி, மக்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 25 வயது முதல், 60 வயதுள்ள, 172 ஆண்களுக்கு, நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது. அவர்கள் அனைவரும், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளவர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள். அனைவரும் வேலூர், பென்லண்ட், குடியாத்தம் அரசு மற்றும் சி.எம்.சி., மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, 939 ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில், 18 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X