பொது செய்தி

தமிழ்நாடு

3 மாவட்டங்களில் ஒரே நாளில் 12 குழந்தை திருமணம் நிறுத்தம்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேலூர்: வேலூர் உள்பட மூன்று மாவட்டங்களில், நேற்று ஒரே நாளில், 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, ஏராளமான குழந்தை திருமணங்கள் ரகசியமாக நடந்து வருகின்றன. வேலூர் அருகே, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கும், கடலூரை சேர்ந்த, 22 வயது கட்டட தொழிலாளிக்கும் நேற்று காலை, 10:00 மணிக்கு மணப்பெண் வீட்டில் திருமணம் நடக்க இருந்தது. தாலி கட்டும் நேரத்தில், வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், கணியம்பாடி, திப்பசமுத்திரம், தொரப்பாடி, அம்பாபுரத்தில் என, மாவட்டத்தில் மொத்தம் ஐந்து குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆறு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டத்தில், பாணாவரம் அருகே, பிளஸ் 2 படிக்கும், 18 வயது மாணவிக்கும், மிட்டாளத்தை சேர்ந்த, 36 வயது கட்டட மேஸ்திரிக்கும் அங்குள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, நெமிலி வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து சமூக நலத்துறையினர் கூறியதாவது: மூன்று மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில், 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிறுமிகள், கொரோனா பரிசோதனைக்கு பின், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SASIREKHA - Vellore ,இந்தியா
26-ஜூன்-202010:17:41 IST Report Abuse
SASIREKHA பொறம்போக்கு குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணனும் நினைத்தவர்கள் கடுமையாக தண்டிக்க படவேண்டும். பெற்றோர்களுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X