சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்களை கடத்திய அ.தி.மு.க., அவைத்தலைவர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் ஊரடங்கில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக அ.தி.மு.க., அவைத்தலைவர் நல்லுசாமி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் மதுபாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுரை கீரைத்துரை நாகுபிள்ளை தோப்பில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையிட்டு 480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாம்பன் ரோடு சரவணன்,43, மகாளிப்பட்டி ரோடு விக்ரம் 25, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நல்லுசாமி என்பவரை தேடி வருகின்றனர். இவர் மதுரை 3ம் பகுதி அ.தி.மு.க., அவைத்தலைவராக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X