பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் 'வைரஸ்' பரவல் அதிகரிப்பு: தடை பகுதியாக 5 இடங்கள் அறிவிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூரில், 'கொரோனா வைரஸ்' அதிகரித்து வருவதால், ஐந்து இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, சாலை, தெருக்கள், தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், கடந்த, 18 முதல், நேற்று வரை, 28 பேருக்கு, 'கொரோனா' தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளான பழையபேட்டை, புதுப்பேட்டை, காந்தி நகர், முல்லைவாடி, ஜோதி நகர் ஆகிய இடங்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்கின்றனர். தவிர, ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடைவீதி சாலை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகள், தடுப்பு கட்டைகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல், ஆத்தூர் ஒன்றியத்தில், மல்லியக்கரை, சீலியம்பட்டி, மஞ்சினி, அப்பமசமுத்திரம் ஊராட்சிகளில், தொற்று ஏற்பட்ட இடங்களின் சாலை, தெருக்களை, தடை செய்யப்பட்ட பகுதியாக, ஊரக வளர்ச்சித்துறையினர் அறிவித்தனர். கெங்கவல்லி, நாகியம்பட்டி ஊராட்சி, உப்பு ஓடை புதூரில், 11 பேருக்கு தொற்றால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில், நேற்று, ஆறு கர்ப்பிணி உள்பட, 38 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்தனர்.

ஆய்வு: தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடி மையத்தில், நேற்று, ஆத்தூர் துணை இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், வருவாய், போலீசார் இணைந்து, 'இ-பாஸ்' இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இருசக்கர வாகனம், நடந்து வருபவர்களை, சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனைக்கு பின் செல்ல அனுமதித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரிக் தொழிலாளர்களை பரிசோதிக்க, மல்லியக்கரையில் உள்ள தனியார் பள்ளியை முகாமாக தேர்வு செய்து, நேற்று, ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, தாசில்தார் அன்புசெழியன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து வாழப்பாடி வருவோரை பரிசோதிக்க, முத்தம்பட்டி தனியார் மகளிர் கல்லூரியில், தனிமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், பி.டி.ஓ., அசோகன், நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X