தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ., - புதுமணப்பெண் உள்பட 26 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.ஐ., புதுமணப்பெண், மாலத்தீவில் இருந்து வந்தவர்கள் என, 26 பேருக்கு, நேற்று, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூர் அரசு மருத்துவமனை, அறுவை சிகிச்சை அரங்க உதவியாளரான, அப்பமசமுத்திரத்தை சேர்ந்த, 27 வயது ஆணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், அவரது குடும்பத்தை சேர்ந்த, 24 வயதுடைய இரு பெண்கள், 43 வயது பெண் ஆகிய மூவருக்கு தொற்று உறுதியானது.


* கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை சேர்ந்த, 47 வயது மின்வாரிய அலுவலர், சில மாதத்துக்கு முன், ஆத்தூர், ஜோதி நகரில் வாடகை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம், ஆத்தூர் வந்தபோது, நத்தக்கரை சோதனைச்சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அப்போது, மின்வாரிய அலுவலர், அவரது, 39 வயது மனைவி, 65 வயது தாய், 20, 23 வயது மகன்கள் என, ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. பெத்தநாயக்கன்பாளையம், தும்பல், மாமாஞ்சியைச் சேர்ந்த, 26 வயதுடைய ஆண், கடலூர் மாவட்டம், வலசக்கல் பகுதியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, நேற்று முன்தினம் திருமணமானது. மணப்பெண், அவருடன் வேனில் வந்த, 20 பேருக்கு, நத்தக்கரை சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்தனர். அதில், புதுப்பெண், உறவினர்களான, 32 வயது பெண், 29 வயது ஆண் என, மூவருக்கு, தொற்று உறுதியானது. புதுமாப்பிள்ளை உள்பட அவரது குடும்பத்தினர், 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்.


* ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன், 52 வயது எஸ்.எஸ்.ஐ., மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பணிபுரிந்தார். அவருக்கு தொற்று உறுதியானது.


* தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி, உப்பு ஓடை புதூர், 24, 21 வயது ஆண்கள்; மாலத்தீவில் இருந்து, கப்பல் மூலம் வந்த தொழிலாளர்களான, கெங்கவல்லி, இந்திரா நகர், 36 வயது ஆண், தெடாவூர், 20 வயது ஆண், செந்தாரப்பட்டி, 38 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் இருந்து வந்த, பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, 62 வயது ஆண்; பெங்களூருவில் இருந்து வந்த, பனமரத்துப்பட்டி, வெடிக்காரன்புதூர், 45 வயது ஆண்; ஆந்திராவில் இருந்து வந்த, கம்மாளப்பட்டி, 23 வயது ஆண்; கர்நாடகா, சென்னையில் இருந்து, அயோத்தியாப்பட்டணம் வந்த, 38, 23 வயது ஆண்கள், 28, 24 வயது பெண்கள், நான்கு வயது ஆண் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டது.

ஏற்காட்டில் 'முதல்': ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் அருகே வசிக்கும், 50 வயது பெண், தன் தாய் இறப்புக்கு, கடந்த, 22ல், பெங்களூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் ஏற்காடு வந்தார். முன்னதாக, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டது. அதில், தொற்று இருப்பது, நேற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென, சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர். ஏற்காட்டில், இது முதல் தொற்றாக பதிவாகியுள்ளது. இதன்மூலம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஒரே நாளில், 26 பேருக்கு, தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை, 190 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸூக்கு தட்டுப்பாடு: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, 39 வயது லாரி டிரைவர். சண்டிகரில் இருந்து, லாரியில் வந்த இவருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. அன்று, ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 41 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸூக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால், டிரைவர், 25 கி.மீ., தூரம் உள்ள தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, பைக்கில் சென்றார். அங்கிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றார். அவரது குடும்பத்தினர் நான்கு பேரை, மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தினர். ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை அழைத்துச்செல்ல, போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், மருத்துவ குழுவினர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X