கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மதுரை :
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ். இவர் ஆற்று மணலை சட்டவிரோதமாக திருடி, வாகனத்தில் கொண்டு சென்றதாக கருங்கல் போலீசார் கைது செய்தனர். ஜஸ்டின் ஜோஸ், 'நான் அப்பாவி. வாகன உரிமையாளர் மட்டுமே. மணல் திருட்டில் ஈடுபடவில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் உத்தரவு: நிபந்தனை ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். கொரோனா தடுப்பு அபாயகரமான பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிட திரும்பப் பெற முடியாத தொகை ரூ.25 ஆயிரத்திற்கான 'டிமாண்ட் டிராப்ட்'டை கன்னியாகுமரி அரசு மருத்துவமனை டீன் பெயரில் எடுத்து மனுதாரர் வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X