வெறிச்சோடிய புது பஸ் ஸ்டாண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய புது பஸ் ஸ்டாண்ட்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share

சேலம்: வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. தமிழகத்தில், கடந்த முறை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபோது, மண்டலங்களுக்குள், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் வரும் பயணியரை கண்காணிக்க, கட்டுப்படுத்த முடியாததால், கொரோனா எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், வேறு மாவட்டங்களுக்கு செல்ல, இ - பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து, வெளிமாவட்ட போக்குவரத்தை நிறுத்தியது. இதனால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், கோவை மார்க்க பஸ்கள் நிறுத்துமிடம், நேற்று வெறிச்சோடியது. மாவட்டத்துக்குள் சில பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பயணியர் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது.
தொப்பூரில் எதிர்ப்பு: சேலம் பஸ்கள், மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே நிறுத்தி வைக்கப்படும். அதேநேரம், தர்மபுரியில் இருந்து பயணியரை ஏற்றி வரும் டவுன் பஸ்கள், தொப்பூர் ஊருக்குள் சென்று, ஊராட்சி அலுவலகம் அருகே நிறுத்துவர். ஆனால், சேலம் வர திட்டமிடும் பயணியர், 1 கி.மீ., தூரம் முனியப்பன் கோவில் வழியாக நடந்து வந்து, சேலம் பஸ்சில் ஏறி, எந்த பிரச்னையின்றி வந்தனர். இதனால், 10 நாளாக, தொப்பூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் மக்களால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் குற்றம் சாட்டினர். இதை, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், நேற்று, ஓமலூரில் இருந்து, தொப்பூர் அருகே வரும் அரசு டவுன் பஸ்சை முற்றுகையிட திரண்டனர்.இதையறிந்து, டவுன் பஸ்சை, சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் திருப்பினுப்பினர். மேலும், அப்பகுதியில் இருந்து, ஒரு வாரமாக, சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு இயக்கப்பட்ட, 35 பஸ்களின் இயக்கமும், நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X