புள்ளிபாளையம் மக்கள் சற்று நிம்மதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புள்ளிபாளையம் மக்கள் சற்று நிம்மதி

Added : ஜூன் 26, 2020
Share

சங்ககிரி: புள்ளிபாளையத்தில், இரு நாளாக, தலா, நான்கு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒருவருக்கு மட்டும் தொற்றால், அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். சங்ககிரி, மோரூர் கிழக்கு ஊராட்சி, புள்ளிபாளையத்தைச் சேர்ந்த, 52 வயது லாரி டிரைவருக்கு, கடந்த, 21ல், தொற்று உறுதியானது. 22ல், சங்ககிரி சுகாதாரத்துறையினர், டிரைவரின், 47 வயது மனைவிக்கு பரிசோதித்ததில், தொற்று உறுதியானது. இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், 23ல், 50 பேருக்கு சளி மாதிரி எடுத்து அனுப்பினர். அதில், 34 வயது தாய், 13 வயது மகன், 50 வயது பெண், 75 வயது மூதாட்டி என, நான்கு பேருக்கு உறுதியானது. 24ல், புள்ளிபாளையத்தில் உள்ள மளிகை கடை, பால் பூத், டீக்கடைக்காரர்கள் என, 79 பேருக்கு சளி மாதிரி எடுத்தனர். அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 60 வயது மாமியார், 33 வயது மருமகள், 13 வயது பேத்தி, 50 வயது ஆண் என, நான்கு பேருக்கு உறுதியானது. தினமும் நான்கு பேர் பாதிக்கப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். நேற்று, 39 பேருக்கு பரிசோதித்ததில், 37 வயது ஆணுக்கு மட்டும் தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X