எல்லை கண்காணிப்பில் போலீசார் அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை கண்காணிப்பில் போலீசார் அலட்சியம்

Added : ஜூன் 26, 2020
Share

வீரபாண்டி: மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், கண்காணிப்பில் போலீசார் அலட்சியம் காட்டுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மருளையம்பாளையத்தில், ஆட்டையாம்பட்டி போலீசார், சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக வருவாய்த்துறையினரும் ஈடுபட்டனர். நேற்று முதல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ - பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சோதனைச்சாவடியில், போலீசார் பணியில் இருந்தபோதும், அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யாமல், எந்த விசாரணை இன்றி கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரால், தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நுழைவாயில் சோதனைச்சாவடியில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், கோனேரிப்பட்டி காவிரியாற்றின் குறுக்கே கதவணை உள்ளது. அதன் கிழக்கு புறம், சேலம் மாவட்டம், மேற்கு புறம் ஈரோடு மாவட்டம் உள்ளது. கதவணையின் ஒருபுறம், சேலம் மாவட்டம், தேவூர் போலீசார், மறுபுறம், ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று இருந்தனர். ஆனால், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, போலீசார் சோதிக்கவில்லை. இதனால், இ - பாஸ் இல்லாமல், பலர் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X