தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 பேர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 பேர்

Added : ஜூன் 26, 2020
Share

வீரபாண்டி: சீரகாபாடி தனியார் மருத்துவமனையில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனை தவிர்த்து, சீரகாபாடியில் உள்ள இரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த தலா, 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, அரசு மருத்துவமனையில் இடமின்றி, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, 70 பேர், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சீரகாபாடியில், ஒரு கர்ப்பிணி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டை சுற்றியுள்ள, 45 பேருக்கு, இரு நாளாக சளி மாதிரி சேகரிக்கப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என, தெரியவந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X