பொது செய்தி

தமிழ்நாடு

வக்கீலால் வந்தது வினை: எஸ்.எஸ்.ஐ.,க்கு தொற்று

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஓமலூர்: அரக்கோணத்தைச் சேர்ந்த, 54 வயது வக்கீல், கடந்த, 19ல், ரயில் மூலம், சேலம் வந்தார். அப்போது, ரயில்வே ஸ்டேஷனில், மருத்துவ பரிசோதனை எடுத்துக்கொண்டார். மறுநாள், ஒரு வழக்கு தொடர்பாக, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., டி.எஸ்.பி.,யை சந்தித்து, ஒரு மணி நேரம் பேசிவிட்டு, மீண்டும் அரக்கோணம் சென்றார். வக்கீலுக்கு, தொற்று உறுதியானதால், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். அப்போது, பணியில் இருந்த போலீசாரும் கலக்கத்தில் இருந்தனர். அதில், 23ல், தானாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட, தர்மபுரியைச் சேர்ந்த, 53 வயது எஸ்.எஸ்.ஐ.,க்கு தொற்று உறுதியானது. இதனால், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், 32 போலீசாருக்கு, இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X