பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று எண்ணிக்கை கண்டு அச்சப்படத் தேவையில்லை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement


மதுரை : ''கொரோனா தொற்று எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை,'' என மதுரையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலக கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று ஏற்படக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு மருத்துவ பரிசோதனை செய்து, நோய் தொற்று கண்டறியப்பட்டால் உயர்தர சிகிச்சையளிக்கப்படுகிறது.நோய் தொற்றுக்கு ஏற்ப மருத்துவ பரிசோதனையை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதி செய்யவும் கலெக்டருக்கு அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.நோய் தொற்று எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எத்தனை பேரை காப்பாற்றியிருக்கிறோம் என கவனிக்க வேண்டும். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது நம்பிக்கை தருகிறது. கொரோனா உலக பொது சுகாதார அவசர பிரகடனம் நடைமுறையில் உள்ளது. அதை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X