பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி இல்லாமல் பண்ணை மேம்பாட்டு கூட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஓமலூர்: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில், பண்ணைக்கு அதிக லாபம் தரக்கூடிய வகையில் நீர் வளம், நிலவளம் பெருக்குதல்; பயிர் திட்டம் தயாரித்து தொடர் வருவாய் பெருக்கும் வழிமுறை குறித்து ஆலோசித்தனர். மேட்டூர், கொளத்தூர், காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர்கள் பங்கேற்றனர். ஆனால், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சமூக இடைவெளியின்றி அமர்ந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X