பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டம் அமைப்பதில் அலட்சியம்: பள்ளிகளில் கள ஆய்வுக்கு உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சேலம்: அரசு பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைக்கும் பணியில், பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியப்போக்குடன் இருப்பதால், கள ஆய்வு நடத்த, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. அதற்கு தேவைப்படும் காய்கறி, கீரைகளை விளைவிக்க, 550 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு, தோட்டக்கலைத்துறை மூலம் உதவிகள் செய்யப்பட்டன. அதில், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், காய்கறி தோட்டத்தை முறையாக பராமரிக்காமல், அமைக்காமல், அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலெக்டர் ராமன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்ட முடிவில் பிறப்பித்த உத்தரவு: பல தலைமை ஆசிரியர்கள், போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதை தீர்க்க, கள ஆய்வு நடத்தி, தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட காய்கறி தோட்டங்களை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்து, மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தோட்டங்களில் காய்ந்த செடிகளை அப்புறப்படுத்தல், நிலம் சீர்செய்தல், வடிகால் ஏற்படுத்துதல், புதிதாக காய்கறி, கீரை வகைகளை பயிர்செய்தல், தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிக்கையை, அனைத்து நிர்வாகமும், புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X