பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சியில் 5 பணியிடம் காலி: தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஓமலூர்: பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் உள்பட ஐந்து பணியிடங்கள் காலியாக உள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஓமலூர் பேரூராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த அசோக்குமார், பதவி உயர்வால், கடந்த மார்ச், 3ல், பெரியகுளம் நகராட்சிக்கு சென்றார். ஓமலூர் பேரூராட்சியை, கூடுதல் பொறுப்பாக, சேலம், கன்னங்குறிச்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் கவனிக்கிறார். அவர், வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்வதால், பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. செயல் அலுவலர் மட்டுமின்றி, கண்காணிப்பாளர், துப்புரவு ஆய்வாளர், வரி வசூலர், கிளர்க் ஆகிய பணியிடங்கள், நான்கு மாதமாக காலியாக உள்ளன. அலுவலகத்தில் உள்ள சில அலுவலர்களும், கருப்பூர் தனிமை மையத்தில் பணிபுரிகின்றனர். போதிய அலுவலர்கள் இல்லாததால், அரசு திட்டப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கொரோனா தடுப்பு பணியாக, பேரூராட்சியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. டீக்கடை, மளிகை, ஓட்டல், பஸ் ஸ்டாண்ட், சந்தைப்பகுதியில், மக்கள் கூட்டமாக உள்ளனர். முகக் கவசம் அணியாமலும் பலர் சென்று வருகின்றனர். நகர் பகுதியில், அரசு கூறியுள்ள நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், காலி பணியிடங்களை, உடனே நிரப்ப, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X