பொது செய்தி

தமிழ்நாடு

உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்டறியும் 'திரீ கலர் தெர்மாமீட்டர்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்டறியும் 'திரீ கலர் தெர்மாமீட்டர்'

மதுரை: கொரோனா பரிசோதனையில் உடல் வெப்பநிலை கண்டறியும் கான்டாக்ட் லெஸ் இன்ப்ரா ரெட் தெர்மாமீட்டரை விட 'திரீ கலர் தெர்மாமீட்டர்' பயன்படுத்த எளிதாக இருப்பதுடன் துல்லிய முடிவுகளை காட்டுகிறது.

கொரோனா வைரஸ் பொருட்களின் மீதும் தொற்றுவதால் வாயில் வைத்து வெப்பநிலை பார்க்கும் மெர்க்குரி தெர்மாமீட்டர் பயன்படுத்த முடியாது. இதற்கு மாற்றாக 'இன்ப்ரா ரெட் தெர்மாமீட்டர்களை பயன்படுத்துகிறார்கள். இந்த மீட்டரில் காட்டும் உடல் வெப்பநிலையை டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் தான் துல்லியமாக கண்டறிய முடியும்.பிற துறை சார்ந்தவர்கள் மீட்டரை கடமைக்கு தான் பயன்படுத்துகிறார்கள். அதில் காட்டும் வெப்பநிலையை சாதாரணமாக எடுத்து கொள்கிறார்கள். மீட்டர் சரியான வெப்ப நிலையை காட்டாத சூழலில் காய்ச்சல் உள்ள நபரை அலுவலகம், பிற பகுதிகளுக்குள் அனுமதிக்க வாய்ப்பு அதிகம்.இதற்கு தீர்வாகவுள்ள 'திரீ கலர் தெர்மாமீட்டர்'களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதில் ஒருவரின் வெப்பநிலையை கண்டறியும் போது மீட்டர் ஸ்கிரீனில் வெப்ப அளவு காட்டும். ஸ்கிரீன் பச்சையாக மாறி ஒரு 'பீப் சவுண்ட்' கேட்டால் வெப்பநிலை சீராக உள்ளது. ஆரஞ்சாக மாறி இரண்டு 'பீப்' கேட்டால் வெப்பநிலை ஓரளவு அதிகம். சிகப்பாக மாறி தொடர் 'பீப்' கேட்டால் வெப்பநிலை அதிகம் என கண்டறியலாம்.

பாரன்ஹீட், சென்டிகிரேட் பார்க்க தெரியாதவர்கள் கலர்களை வைத்து காய்ச்சலை உறுதி செய்யலாம்.மதுரை பயோ மெடிக்கல் கருவி தயாரிப்பாளர் சுந்தரராஜன் கூறியதாவது: இன்ப்ரா ரெட் மீட்டர்களில் பாரன்ஹீட், சென்டிகிரேட், லைட், பாடி அல்லது சர்பேஸ் என மூன்று பட்டன்கள் இருக்கும். பாடிக்கு பதில் சர்பேஸ் என செட்டாகி இருக்கிறதா என உறுதி செய்த பின் வெப்பநிலை கண்டறிய வேணடும். இல்லை என்றால் நம்மை சுற்றியுள்ள வெப்பநிலையைத்தான் காட்டும். மீட்டர் பயன்படுத்தாத நேரத்தில் பேட்டரிகளை அகற்ற வேண்டும். அலுவலகங்கள், பொதுஇடங்களில் பயன்படுத்த வசதியாக 'பீப் சவுண்ட்' கேட்கும் தெர்மல் ஸ்கேனர் பயன்பாட்டிற்கு வரவுள்ளது, என்றார்.accurabiomedics@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X