சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை அச்சப்படுத்த நிர்வாகி கடத்தல் நாடகம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி, வீரகனூரைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி சுரேஷ், 37. அதே பகுதியில் டீக்கடை நடத்தும் இவர், கடந்த, 22ல், ஆத்தூர் செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. 23ல், மனைவி சுமதியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், தன்னை சிலர் கடத்தியதாக கூறியுள்ளார். இதனால், வீரகனூர் போலீசில், சுமதி புகாரளித்தார். நேற்று, அவர், ஏத்தாப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து, போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, 'கடன் அதிகளவில் உள்ளதால், மனைவி திட்டினார். மனமுடைந்த நிலையில் இருந்ததால், மனைவியை அச்சப்படுத்த, கடத்தியதாக கூறி, உறவினர் வீட்டில் இருந்தேன்' எனக்கூறினார். அவரை எச்சரித்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X