சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எப்.எம்., ரேடியோவில் வெடிவைத்து தம்பியை கொன்ற அண்ணன் கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: முன்விரோதத்தில், எப்.எம்., ரேடியோவில் வெடி வைத்து, தம்பியை கொன்ற, அண்ணணை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டி, வெள்ளிமலையார் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி மணி, 50. கடந்த, 16ல், சாலையில் கிடந்த எப்.எம்., ரேடியோவை வீட்டுக்கு எடுத்துச்சென்று, மறுநாள் மதியம், மின் இணைப்பு கொடுத்து இயக்கினார். அப்போது வெடித்ததால், சம்பவ இடத்தில் மணி உடல் சிதறி பலியானார். வீட்டிலிருந்த அண்ணன் மகன் வசந்தகுமார், 37, பேத்தி சவுரதி, 12, உறவினர் நடேசன், 65, படுகாயமடைந்தனர். சேலம் ஏ.டி.எஸ்.பி., அன்பு தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், கடந்த, 23ல், மணியின் அண்ணன் செங்கோடன், 63, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தனிப்படையினர் விசாரித்ததில், முன்விரோதத்தில் தம்பியை வெடிவைத்து கொன்றது செங்கோடன் என்பதை கண்டுபிடித்தனர். அவரை, நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து, சேலம் எஸ்.பி., தீபாகானிகேர், நிருபர்களிடம் கூறியதாவது: இறந்த மணிக்கு, செங்கோடன், ஜெயபால், மாதேஸ்வரன் என, உடன் பிறந்த சகோதரர் மூன்று பேர் உள்ளனர். ஓராண்டுக்கு முன், மணி, ஜெயபால், மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, தங்கள் நிலத்துக்கு வழிப்பாதையை விலைக்கு வாங்கினர். இதற்கு, செங்கோடன் உடன்படவில்லை. தற்போது, பாதையை பயன்படுத்த செங்கோடன், பாத்தியம் கேட்டபோது, மணி சம்மதிக்கவில்லை. இதனால், மணி மீது, செங்கோடனுக்கு முன்விரோதம் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்கு முன், நாமகிரிப்பேட்டையிலிருந்து, மூன்று ஜெலட்டின், டெட்டனேட்டர் வெடிமருந்தை செங்கோடன் வாங்கி வந்தார். சேலத்திலிருந்து வாங்கி வந்த எப்.எம்., ரேடியோவில், வெடிபொருட்களை பொருத்தி, மணி தோட்டத்துக்கு செல்லும் வழியில் வைத்துள்ளார். அதை, மணி வீட்டிற்கு எடுத்துச்சென்று, மின் இணைப்பு கொடுத்தபோது, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்து விற்றவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X