சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரின் உடல் தோண்டி எடுப்பு: மனைவி, கள்ளக்காதலன் கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சேலம்: கணவரின் உடலை தோண்டி எடுத்த போலீசார், மனைவி, கள்ளக்காதலனை கைது செய்தனர்.
சேலம், கந்தம்பட்டி, செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் சேட்டு, 45. கட்டட தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி, 37. இவர்களது மகள் பவித்ரா, 16, மகன் தமிழரசன், 14. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 10 ஆண்டாக பிரிந்து வாழ்ந்த நிலையில், சமீபத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த, 8 முதல் சேட்டு, 16 முதல், பூங்கொடி மாயமானதாக, நேற்று முன்தினம், சேட்டுவின் தம்பி ராஜேந்திரன், 37, புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். அதில், பூங்கொடி, அவரது கள்ளக்காதலனான, சோளம்பள்ளத்தை சேர்ந்த புரு?ஷாத்தமன், 35, ஆகியோர் சேர்ந்து, சேட்டுவை கொன்றதும், வீடு அருகே உடலை புதைத்ததும் தெரிந்தது. நேற்று, பூங்கொடி, புரு?ஷாத்தமனை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சேட்டு, இரவில் மது அருந்தி விட்டு வந்து, பூங்கொடியை அடித்துள்ளார். இதனால், அவர்கள் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, பூங்கொடி, புரு?ஷாத்தமனிடம் தெரிவித்தார். இதனால், இருவரும் சேர்ந்து, சேட்டுவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி, கடந்த, 7 நள்ளிரவு, சேட்டு வீட்டுக்கு புரு?ஷாத்தமன் வர, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, புரு?ஷாத்தமன், துண்டால், சேட்டுவின் கழுத்தில் போட்டு இறுக்கினார். தொடர்ந்து, பூங்கொடி, புரு?ஷாத்தமன் சேர்ந்து, கத்தியால், சேட்டுவின் கழுத்தை அறுத்து, வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துவிட்டு தலைமறைவாகினர். இச்செயலை, இருவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று, நடித்து காட்டச் செய்தோம். இதைப்பார்த்து, சேட்டுவின் மகன், மகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு, உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின், சடலத்தை தோண்டி எடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X