பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில், முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுபாடுகளுடன் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, தளர்வுகள் விலக்கப்பட்டு ஊரடங்கில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில், தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில், எஸ்.ஐ., ராஜகோபால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள், தர்மபுரி அடுத்த ஆவின் ஜங்சன் அருகே, சாலையில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். மேலும், முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, முகக் கவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், காரில் மூன்று பேர், ஆட்டோக்களில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தவர்களுக்கும், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி நகராட்சி பகுதியில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத, தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் ஜவுளி கடை உள்ளிட்ட, ஐந்து கடைகளுக்கு தலா, 500 வீதம், 2,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X