பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட எல்லை வரை பஸ் சேவை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசின் உத்தரவு படி, நேற்று முதல் மாவட்ட எல்லைக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பை தடுக்க, கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 60 சதவீத பயணிகள் என்ற கட்டுப்பாடு மற்றும் மாவட்டம் வாரியாக புதிய போக்குவரத்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டு கடந்த, 1 முதல், பொது போக்குவரத்து துவங்கப்பட்டது. இதன்படி, அரசு போக்குவரத்து கழக, தர்மபுரி மண்டலத்தில் மொத்தமுள்ள, 853 பஸ்களில், 453 பஸ்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, நேற்று முதல் வரும், 30 வரை மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்க, தமிழக அரசு உத்தரவு பிறக்கப்பட்டது. இதையடுத்து, தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளான சப்பானிப்பட்டி, இருமத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று தர்மபுரி - சேலம் மாவட்ட எல்லைகளான தொப்பூர், பொம்மிடி, ஏரியூர் வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையே, இ- பாஸ் தேவை என, அரசு அறிவித்ததை அடுத்து, மாவட்ட எல்லைகளில் உள்ள, 10 சோதனைச்சாவடிகளிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X